கல்லுரி மாணவர்களுக்கு உதவிய தல அஜித்; குவியும் பாராட்டுகளும்..! வாழ்த்துகளும்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோவாக இருப்பவர் தல அஜித் குமார். எந்த பின்புலம் இல்லாமல் தனது சொந்த சொந்த உழைப்பின் மூலம் திரைத்துறைக்கு நுழைந்தவர் என்பதால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறார்கள்.
அவர் சினிமாவை தவிர்த்து பைக், கார், விமானம் போன்றவைகளை இயக்குவதிலும் அது தொடர்பான போட்டிகளிலும் கலந்து கொள்வதில் பேரார்வம் கொண்டவர். பல போட்டிகளில் கொண்டு தனது திறமையை நிரூபித்தவர்.
இந்த நிலையில் சென்னை MIT கல்லூரியின் தக்ஷா அணிக்கு ஆளில்லா விமானம் இறக்குவதற்கு சிறப்பு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அந்த அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ட்ரோன் ஆளில்லாத விமான இயக்குதல் போட்டியில் கலந்துகொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன அதில் இரண்டாம் இடத்தை தக்ஷா அணி பிடித்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அவர்கள் அஜித்துக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்தது. மேலும் 2018ம் ஆண்டுக்கான அப்துல் கலாம் விருதையும் சென்னை MIT தக்ஷா அணி பெற்றது குறிப்பிடத்தக்கது.