மாணவர்களே உஷார்.. இலவச லேப்டாப் வாங்குவதாக மோசடி: வாட்ஸப்பில் வைரலாகும் லிங்க்.!



WhatsApp Link about Scam For Free Laptop 

 

இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கிய நாளில் இருந்து, அதனை முறைகேடாக பயன்படுத்தும் நபர் தனிப்பட்ட நபர்களின் தரவுகளை திருடி வரும் செயல்களும் தொடருகின்றன. 

இவற்றில் இருந்து தப்பிக்கவும், தவிர்க்கவும் பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் மொத்தமாக மோசடிகளை தவிர்க்க முடிவது இல்லை. அதனை உறுதி செய்வதைப்போல, அரசு அறிவிப்பது போல பகல் மோசடி சம்பவங்களும் நடக்கின்றன. 

இந்நிலையில், படித்து வரும் மாணவர்களை குறித்து, அவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக லின்க் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த தகவலில், "மாணவர்களின் லேப்டாப் திட்டம் 2023க்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. நிதிக் காரணங்களால் சொந்தமாக மடிக்கணினி வாங்கும் நிலையில் இல்லாத மற்றும் அவர்களின் கல்வி நிலையில் லேப்டாப் தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் திறக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் 960,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் கற்றலை மேம்படுத்த இலவச லேப்டாப் வழங்கப்படும். விண்ணப்பம் தொடங்கப்பட்டு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் மடிக்கணினிகளைப் பெறத் தொடங்கியுள்ளனர். இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும் https://fnx62.top/?xt=1" என அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது மாநில அரசோ, தனியார் நிறுவனமோ இவ்வாறான அறிவிப்பை வெளியிடவில்லை. மோசடியாளர்களின் செயல்பாடுகளை கண்டறிந்து, அதனை தவிர்க்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். ஆகையால், இதுபோன்ற லிங்குகளை பார்த்தல், அதில் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டாம்.