#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு விநாடிக்குள் 1000 HD திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் புதிய கண்டுபிடிப்பு! ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!
வினாடியில் ஆயிரம் எச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் வகையில் அதிவேக இன்டர்நெட் வசதியை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
தற்போதைய வாழ்க்கை முறையில் இன்டர்நெட் இல்லாவிட்டால் உலகமே இருண்ட உலகம் ஆகிவிடும். அந்த அளவிற்கு இன்டர்நெட் மக்களுக்கு அத்தியாவசியமாகிவிட்டது. இந்நிலையில் அதிவேக இன்டர்நெட் வசதியை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் கண்டுபிடித்த இன்டர்நெட் வேகம் ஒரு விநாடிக்குள் 1000 HD திரைப்படங்களை டவுன்லோட் செய்துவிடலாம் என்ற அளவுக்கு அதிவேகமானது. ஒரு விநாடிக்கு 44.2 டெராபிட்டில் இந்த இன்டர்நெட் வேகம் உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
மோனாஷ், ஸ்வின்பேர்ன் மற்றும் ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிவேக இன்டர்நெட்டை கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் மெல்போர்னில் 18 லட்சம் குடும்பங்களின் அதிவேக இணைய இணைப்புகளை ஆதரிக்கும் திறனைக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.