திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இத்தாலியில் தொடரும் சோகம்..! கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 100 மருத்துவர்கள் மரணம்.!
சீனவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இருப்பினும் கொரோனாவின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
உலகளவில் இதுவரை 1,607,912 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 95,813 பேர் உயிர் இழந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்துவருகிறது. இதில், இத்தாலி நாடு பெருமளவில் இழப்புகளை சந்தித்திவருகிறது.
இத்தாலியில் இதுவரை 143,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட, அதில் 18,279 பேர் உயிர் இழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா இறப்பில் முதல் இடத்தில் உள்ளது இத்தாலி. இதில் மேலும் கொடுமையான சம்பவம் என்வென்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்களில் இதுவரை 100 பேர் பலியானதாக அதிர்ச்சிகரமான தகவலை இத்தாலியின் முக்கிய மருத்துவர்கள் சங்கம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.