பப்ஜி காதல்... காதலனை சந்திக்க... அந்தமானில் இருந்து உத்தர பிரதேசம் வந்த பத்தாம் வகுப்பு மாணவி...!



10th class girl who came from Andaman to Uttar Pradesh to meet her boyfriend...

பப்ஜி விளையாடும் போது ஏற்பட்ட பழக்கத்தால் உண்டான காதல் காதலனை தேடி 2500 கிலோமீட்டர் தூரம் வந்த பத்தாம் வகுப்பு மாணவி.

அந்தமான் நிக்கோபார் பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பப்ஜி விளையாடிய போது ராஜ்பால் என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் பரேலி அருகில் இருக்கும் பரித்பூரை சேர்ந்தவர் ராஜ்பால். 

இருவரும் அடிக்கடி முகநூல் மூலமாக சாட்டிங் செய்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் பேசி பழகியுள்ளனர். இந்நிலையில் மாணவி தனது காதலனிடம் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே காதலன் உத்திரபிரதேசத்திற்கு கிளம்பி வருமாறு சொல்லியுள்ளார். 

இதைக் கேட்டு மாணவியும் வீட்டிலிருந்து புறப்பட்டு கொல்கத்தா வழியாக உத்தர பிரதேசத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று அவரது காதலனை சந்தித்துள்ளார். இதனிடையே மாணவியரின் பெற்றோர் அவரை காணாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். மாணவியின் செல்போன் சிக்னல் மூலம் அவர் உத்தர பிரதேசத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே அந்தமானிலிருந்து காவல்துறையினர் உத்தரபிரதேசத்திற்கு சென்று மாணவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை மீட்டனர். 

அப்போது காதலன் ராஜ்பால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், மாணவியின் காதலன் ராஜ்பாலுக்கு அவர்களது பெண்ணை திருமணம் செய்து வைக்க தயாராக உள்ளதாக கூறினர். ஆனால் ராஜ்பால் இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

மேலும் அந்த இரண்டு ஆண்டுகளும் ராஜ் பால் தங்களது ஊரில் வந்து தங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். அந்தமானிலிருந்து உத்திரபிரதேசம் 2500 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இவ்வளவு தூரத்தை மாணவி எப்படி கடந்து சென்றார் என்பது ஆச்சரியமாக உள்ளது.