#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலுக்கு கண்கள் இல்லை என்பதை உண்மையாக்கிய வாலிபர்.! 76 மூதாட்டி மீது தீராத காதல்.! விரைவில் திருமணம்.!
இத்தாலியில் 19 வயதான இளைஞர் ஒருவர், 76 வயது மூதாட்டியுடன் தனது திருமணத்தை நிச்சயத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை இளைஞர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
இத்தாலியை சேர்ந்த19 வயது சிறுவனுக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த பெண் அவரின் வயதுடைய பெண் அல்ல. அந்த பெண்ணிற்கு 76 வயது. இவர்களின் திருமணம் இணையதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இருந்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை என்று சிறுவன் கூறியுள்ளார். இத்தாலியின் மிலன் நகரைச் சேர்ந்தவர் கியூசெப் டி'அன்னா என்ற 19 வயது இளைஞர். அவர் தனது வாழ்க்கை துணையாக 76 வயதான மூதாட்டியை நிச்சயித்தக்கொண்டதாக டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார்.
மூதாட்டிக்கு தனது காதலை வெளிப்படுத்திய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை 2 கோடி பேர் பார்த்துள்ளனர். அது மட்டுமல்லாமல் டி'அன்னா, தனது வருங்கால மனைவிக்கு அளித்த வைர மோதிரத்தின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், வேறு ஒரு புகைப்படத்தில், அவர் அந்த பாட்டியை முத்தமிடுவதையும் பகிர்ந்துள்ளார். பல புகைப்படங்களை இணைத்து, வீடியோவாக தயாரித்து வெளீயிட்டு உள்ளார். அதில் அவர், 'எங்கள் வாக்குறுதி' என்று தலைப்பிட்டுள்ளார். இந்தநிலையில், ஏராளாமானார் டி'அன்னாவை டிரோல் செய்து வருகின்றனர். மூதாட்டியின் வங்கி கணக்கில் எவ்வளவு மில்லியன் டாலர்கள் வைத்துள்ளார் என்றும் சிலர் கேலியாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.