அதிர்ச்சி... 20,000 மக்கள் கிரீஸ் நாட்டில் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் சம்பவம்.! நடந்தது என்ன.?



20-thousand-people-sent-to-safe-places-in-greece-what-h

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பநிலை காரணமாக காட்டு தீ ஏற்பட்டது பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக கிரீஸ் நாட்டில் இருந்து 20 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளான கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில்  கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள காட்டுப்பகுதிகளில்  பெரும் காட்டுத் தீ ஏற்பட்டு பேரழிவுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Greeceகிரீஸ் நாட்டில் நிலவி வரும் வெட்ப அலையினால் அங்கு பெரும் காற்று தீ வேகமாக பரவி வருகிறது. இதிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம்  காட்டு தீ ஏற்பட்ட பகுதிகளுக்கு அருகே வசிக்கும் 20 ஆயிரம் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி இருக்கிறது.

Greeceஇதேபோன்று காட்டுத் தீயினால் இத்தாலி நாட்டின் விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் பிரச்சனையால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் வெப்ப அலை உலகையே அச்சுறுத்தி வருகிறது.