ஆல்கஹால் கொரோனாவை கொல்லும் என நம்பி எரி சாராயத்தை குடித்து 27 பேர் பலி!



27-died-by-hoping-alchohol-cure-corono-virus

ஆல்கஹால் கொரோனாவை கொல்லும் என்று பரவிய் வதந்தியை நம்பி எரி சாராயத்தை குடித்து ஈரானில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவிற்கு அடுத்தப்படியாக கோரோனா வைரஸ் பாதிப்பு ஈரானில் அதிகப்படியாக உள்ளது. ஈரானில் இதுவரை கொரோனா வைரஸால் 237 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 43 பேர் பலியாகினர்.

இந்நிலையில் கொரோனா தாக்காமல் இருக்க ஒருசிலர் சில தவறான வழிமுறைகளை மக்களிடம் பரப்புகின்றனர். அதில் ஒன்று ஆல்கஹால் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் தாக்காது என்பது தான்.

Corono virus

இப்படி ஒரு வதந்தியை நம்பி ஈரானில் மெத்தனால் எனும் எரி சாராயத்தை குடித்து 27 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. குஸெஸ்தான் மாகாணத்தில் 20 பேரும், அல்போர்ஸ் மாகாணத்தில் 7 பேரும் இதுவரை மெத்தனாலை குடித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் மதுவானது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கல்லத்தனமாக இதுபோன்ற எரி சாராயம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்புக்கு அஞ்சி எரி சாராயத்தை குடித்து 218 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.