திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
317 கிலோ எடை.. இளைஞருக்கு எமனான விஷயம்.? அதிர வைக்கும் சாவின் காரணம்.!
பிரித்தானியா பகுதியில் ஜேசன் ஹோல்டன்(Jason Holton) என்ற நபர் வசித்து வந்த நிலையில் அவர் தனது 34 வது பிறந்தநாள்க்கு ஒரு வாரம் முன்பாக மருத்துவமனையில் உயிரிழந்து இருக்கிறார்.
அவர் இறந்தபோது அவரின் உடல் எடை 317.51 கிலோ. இது பற்றி மருத்துவர்கள், அவருக்கு உடல் உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டு மற்றும் உடல் பருமன் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இறப்பதற்கு முன்பாக அவருக்கு சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து செயலிழந்து வந்த நிலையில், அவர் மரணம் அடைந்துள்ளார். ஜேசனின் தந்தை திடீரென உயிரிழந்த நிலையில், அந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்காக அவர் அதிக அளவு உணவு உட்கொள்ள துவங்கியுள்ளார்.
கடந்த 2015இல் பிரித்தானியாவிலேயே ஜேசன் தான் உடல் பருமன் அதிகமாகக் கொண்ட நபராக இருந்துள்ளார். 2020ல் அவருடைய உறுப்புகள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து செயலிழக்க துவங்கியது. அப்போது கிரேன் மூலமாக அவருடைய வீட்டில் இருந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கே அவருக்கு உடல் பருமன் குறைக்கக்கூடிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நிலை குலைந்தார். அப்போது அவரை லண்டன் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி மிருகங்களுக்கு எக்ஸ்ரே எடுக்கக்கூடிய கருவியை கொண்டு ஆய்வு செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அந்த முடிவு பின்னர் கைவிடப்பட்டது. தொடர்ந்து, அவரால் நடக்க முடியாமல் போனதும் அவர் மருத்துவமனை குடியிருப்பு ஒன்றில் இருந்து தனது மரணம் வரை வாழ்ந்துள்ளார்.