தாடி வளர்த்து கின்னஸ் சாதனையில் முதலிடம் பிடித்த இளம்பெண்!!



38 years old lady recorded in Guinness world record

மெரிக்காவை சேர்ந்த எரின் ஹனிகட் என்னும் 38 வயதுடைய பெண் பிசிஓஎஸ் என்ற பிரச்சினையினால், ஹார்மோன் சமநிலை, ஒழுங்கற்ற மாதவிடாய், அதிகப்படியான முடி வளர்ச்சி, கூடுதலான எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில் தான் ஒரு நாளைக்கு மூன்று முறை தனது முகத்தில் வளரும் தாடியை ஷேவிங் செய்தும் முடி அகற்றும் கருவிகளைக் கொண்டும் முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தி வந்துள்ளதாக கூறினார். 

இதனைத் தொடர்ந்து உயர் ரத்த அழுத்தத்தால் கண் பக்கவாதம் ஏற்பட்டு அவரது பார்வையையும் இழந்து உள்ளார். மேலும் அவரது கால்களில் ஒன்றின் பாதியையும் துண்டிக்கும் நிலை வந்தது.

இதற்குப் பிறகு அவர் சேவ் செய்வதை நிறுத்திக் கொண்டார். பின்னர் கொரோனாவால் லாக் டவுன் சமயம் ஏற்பட்டபோது, அவரது தாடியை வளர்க்க முடிவு செய்துள்ளார்.

அந்த வகையில் அவரது தாடியை 30 சென்டிமீட்டர் வரை வளர்த்துள்ளார். இதனால் அவர் உலகில் மிக நீளமான தாடியை கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை அடைந்துள்ளார்.