பிறந்த பிஞ்சு குழந்தையையும் விட்டு வைக்காத கொரோனா..! 6 வார பச்சிளம் குழந்தை கொரோனாவால் பலி.



42-days-baby-died-by-corona

சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் தீவிரமாக பரவி உலகத்தையே உலுக்கி வருகிறது. கொரோனாவால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட நாடாக இத்தாலி முதல் இடத்தில் உள்ளது. ஆனாலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் சரியான நேரத்தில், பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்ததால் கொரோன பரவல் சற்று தடுக்கப்பட்டது. ஆனாலும் கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவிலும் சற்று கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க உலக நாடுகள் முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

corona

இந்தநிலையில், அமெரிக்காவில் ஆறு வார குழந்தை கொரோனாவுக்கு பலி ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த குழந்தை கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துவிட்டதாக அந்த மாகாண ஆளுநர் நெட் லாமோண்ட் தெரிவித்திருக்கிறார்.

அந்தக் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது செவ்வாய் கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது எனவும் அவர் கூறினார். ஏற்கெனவே அமெரிக்காவில் 9 மாதக் குழந்தை இறந்திருந்த நிலையில், இப்போது 6 வாரத்தில் ஒரு குழந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.