மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
51 ஆண்டுகள் இணைப்பிரியாமல் வாழ்ந்த தம்பதியினர்! இறப்பில் கூட இப்படி ஒரு ஒற்றுமையா..!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த முதிர் வயது தம்பதியினர் திருமணமாகி 51 ஆண்டுகள் இணைப்பிரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கடுமையான காய்ச்சல் ஏற்ப்பட்டதை அடுத்து இருவரும் தங்களை தானே தனிமைப்படுத்தி கொண்டு இருந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அந்த முதியவர்களின் மகன் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது எனது தந்தையும், தாயும் யாராலும் பிரிக்க முடியாத ஜோடியாக வாழ்ந்து வந்தனர். ஏன் எனது தந்தைக்கு காய்ச்சல் வந்த போது கூட இருவரும் பிரியாமல் தங்களை தானே தனிமைப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் சில நாட்கள் தனிமையில் இருந்த எனது தந்தையின் உடல் நிலை மோசமானதை அடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியது. அதனை தொடர்ந்து தாயும் மருத்துவமனையில் சேர்த்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இருவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முதலில் கணவர் உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து மனைவியும் வேறும் 6 நிமிட இடைவெளியிலேயே உயிரிழந்துள்ளார். இல்லற வாழ்வில் இணைப்பிரியா தம்பதியினராக வாழ்ந்தவர்கள் தற்போது இறப்பிலும் பிரியாமல் ஒன்றாகவே இறந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.