மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடிய பரிதாபம்... மூளையை தின்னும் அமீபா... 2 வயது பிஞ்சு பலி... மருத்துவர்கள் எச்சரிக்கை.!
அமெரிக்காவில் கொடிய வகை மூளையை தின்னும் அமீபா நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற நோயின் தாக்குதல் அங்கு அடிக்கடி நடந்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவைச் சார்ந்த இரண்டு வயது சிறுவன் கடந்த ஏழு நாட்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நீர் நிலைகளில் இருக்கும் இந்த கொடியவகை அமீபாவானது மனித உடலுக்குள் ஊடுருவி மூளையின் நரம்பு மற்றும் திசுக்களை தாக்கி அதன் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் வாய்ந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் இந்த ஒரு வார காலமாக இந்த நோயினால் அவதிப்பட்டு வந்ததாகவும் அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தோம் இந்த நோயின் பாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியவில்லை எனவும் சிறுவனின் தாய் மன வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். இந்தக் கொடிய வகை மூளையை தாக்கும் அமீபா நோயால் அமெரிக்க மக்கள் அச்சமடைந்துள்ளனர்.