திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
15 வயதில் பல மில்லியன் கோடிக்கு அதிபதி.. இளம் சிறுமி ரிட்டயர்மெண்ட் அறிவித்து பெரும் சாதனை..!
Pixie's Fidgets மற்றும் Pixie's Bows என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மற்றும் உரிமையாளராக இருந்து, பல மில்லியன்கோடிக்கு அதிபதியாக வலம்வரும் 15 வயது சிறுமி தனது பணிஓய்வை அறிவித்து இருக்கிறார்.
ஆஸ்திரேலிய நாட்டினை சார்ந்த பெண்மணி ராக்ஸி ஜாசென்கோ (Roxy Jacenko). இவரது மகள் பிக்சி கர்டிஸ் (Pixie Curtis). சிறுமி தனது தாயார் ராக்சியின் உதவியுடன், 10 வயதாக இருக்கையில் Pixie's Fidgets என்ற குழந்தைகளுக்கான பொம்மை தயாரிக்கும் கம்பெனியை நிறுவியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் பொம்மைகள் எதிர்பார்த்ததை விட அதிகளவு விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விற்பனையை தொடங்கிய முதல் மாதத்திலேயே 140,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,04,14,110) வருவாய் கிடைத்துள்ளது. இவர்களின் தயாரிப்பு பொருள் நிறுவனத்தை தொடங்கிய 48 மணிநேரத்திற்குள் விற்றும் தீர்ந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, கடந்த வருடம் சிகை அலங்கார நிறுவனத்தை ஏற்படுத்திய நிலையில், அதிலும் நல்ல வருவாய் கிடைத்துள்ளது. தற்போது, 15 வயதாகும் சிறுமி இரண்டு நிறுவனத்திற்கும் உரிமையாளர் மற்றும் தலைமை அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதனால் உலகளவில் இளம் வயதில் ஓய்வு பெரும் முதல் நபராக சிறுமி பிக்சி கர்டிஸ் இருக்கிறார். மேலும், அவர் தற்போது தான் பள்ளிப்படிப்பை நிறைவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.