மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உருளைக்கிழங்கு வடிவிலான கிரகம் கண்டுபிடிப்பு... வானியல் ஆய்வாளர்கள் அசத்தல்.!
வானியலாளர்கள் WASP-103b என்ற உருளைக்கிழங்கு வடிவ கிரகத்தை கண்டறிந்துள்ளனர்.
பால்வழி அண்டம் குறித்தும், வானியல் குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த ஆய்வுகளின் போது, பல புதிய கிரகங்கள், பால்வழி அண்டங்கள், நட்சத்திர கூட்டமைப்புகளை தொடர்ந்து ஆய்வாளர்கள் கண்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆய்வாளர்கள் உருளைக்கிழங்கு வடிவத்தை ஒத்துள்ள WASP-103b என்ற கிரகத்தை கண்டறிந்துள்ளனர். இது பார்ப்பதற்கு உருளைக்கிழங்கு போல உள்ளது என்றும், வியாழன் கோளை விட ஒன்றரை மடங்கு பெரிய அளவில் உள்ள நட்சத்திரத்தை சுற்றி உருவாகியுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
WASP-103b கிரகம் 20 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள நட்சத்திர கூட்டமைப்பில் உள்ளது என்றும், இவை நட்சத்திரத்திற்கு அருகே இருப்பதால் அலை அழுத்தங்கள் அதனை உருளைக்கிழங்கு வடிவில் உருவாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது வரை வானியல் ஆய்வாளர்கள் 4,884 கிரகத்தை கண்டறிந்துள்ளனர். இவை வெவ்வேறு அளவுகள், வடிவங்கள் கொண்டவை ஆகும்.