மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்..!
சமீபகாலமாக உலகமெங்கும் ஆங்காங்கே நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பேரழிவையும் உயிர் சேதத்தினையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேஷியாவை தாக்கியுள்ளது.
இந்தோனேசியாவில் பாண்டா கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதனையடுத்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படலை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.