மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனிமே நம்ம காட்டுல பணமழை தான்!! முதலாளியை கரம் பிடித்த வீட்டு வேலைக்காரன்..!
காதலுக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுநிலை தேவையில்லை என்று நிரூபித்துள்ளனர் இந்த பாகிஸ்தானை சேர்ந்த தம்பதியினர். அன்னி என்று பெண் ஒருவர் தனது பெற்றோருடன் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். இவர்கள் அந்த நாட்டில் செல்வ செழிப்போடும் , பெரும் அந்தஸ்தோடும் வாழ்ந்து வரக்கூடிய ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
அன்னிக்கு திருமண வயது நெருங்குவதால் அவரது பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். எனவே அவரது பெற்றோர் அன்னிக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அவர் அன்னியின் சொத்துக்கள் மீது மட்டுமே விருப்பம் கொண்டதாக தெரியவந்துள்ளது.
அதனையடுத்து அன்னி பெற்றோரிடம் அதனை கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி அதற்கு பின் பார்த்த மாப்பிள்ளைகள் அனைவரும் அவளது சொத்துக்கள் மீது மட்டுமே கவனத்தை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் தான் அன்னி வீட்டிற்கு இஷாயாகில் என்ற இளைஞர் வீட்டு வேலைக்காக வந்துள்ளார்.அவரது பழக்கவழக்கங்கள் அன்னிக்கு பிடிக்கவே அதை அவரிடம் சொல்லி இருக்கிறார்.
தனக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி தன்னிடம் காதலை சொல்கிறாரே என்று அதிர்ச்சியில் இருந்தார் இஷாயாகில். பிறகு சில தினங்கள் சென்ற பின்னர் அன்னியின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.பின்பு அன்னி தன் காதலை பெற்றோரிடம் கூறி சம்மதிக்க வைத்துள்ளார். அவர்களும் சம்மதித்த நிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இருவரும் மகிழ்ச்சியாக தங்களது திருமண வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்