திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
1 ஒரு வயது சகோதரியை சுட்டுக்கொலை செய்த 3 வயது குழந்தை... உலகை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்.!
அமெரிக்காவில் மூன்று வயது பெண் குழந்தை தனது ஒரு வயது சகோதரியை சுட்டு படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரத்தின் ஃபால்ப்ரூக் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குறித்த வீட்டிற்கு உள்ளே சென்று சோதனை செய்தபோது ஒரு வயது குழந்தை ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி குண்டடிப்பட்டு கிடந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அந்த குழந்தையை மீட்ட காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தியது. வீட்டில் பெற்றோர்கள் இல்லாத போது அந்த ஒரு வயது குழந்தையும் அவரது சகோதரியான மூன்று வயது குழந்தையும் மட்டும் தான் வீட்டில் இருந்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த மூன்று வயது குழந்தை இடம் நடத்திய விசாரணையில் வீட்டிலிருந்த துப்பாக்கியை வைத்து விளையாடிய போது அது தவறுதலாக வெடித்ததில் ஒரு வயது குழந்தை பலியானது தெரிய வந்திருக்கிறது. 33 கோடி மக்கள் வாழும் நாட்டில் 43 கோடி துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளன என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும் துப்பாக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.