மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BREAKING || பிரம்மாண்ட மசூதியில் பயங்கர தீ விபத்து: இடிந்து தரைமட்டமான காட்சியுடன் வைரலான வீடியோ..!
இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தா பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய மைய மசூதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், மசூதி இடிந்து தரைமட்டமாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தீயில் எரிந்துகொண்டிருந்த மசூதியின் கோபுரம் சரிந்துவிழும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோபுரம் இடிந்து விழுந்த பின்பு எழுந்த புகையால், அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.
The giant dome of the Jakarta Islamic Centre Grand Mosque in Indonesia has collapsed after a major fire broke out.
— CBS News (@CBSNews) October 19, 2022
Officials say there were no victims. pic.twitter.com/1HfypNJcAt
இந்த தீ விபத்தின் போது தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் அங்கு இருந்தபோதும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.