மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உயிரைக் குடித்த 30 கிராம் ஹெராயின்... 20 வருடங்களுக்குப் பின் முதல்முறையாக பெண்ணிற்கு தூக்கு... அதிர்ச்சி ரிப்போர்ட்.!
20 வருடங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் நாட்டில் பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த சாரிதேவி ஜமானி என்ற 45 வயது பெண்ணிற்கு இன்று அதிகாலை சிங்கப்பூர் நேரப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர் போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு 2018 ஆம் ஆண்டு இவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
30 கிராம் ஹெராயின் இவர் கடத்தி வந்ததால் இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சிங்கப்பூர் நாட்டின் சட்டப்படி 15 கிராமுக்கு அதிகமாக வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.இதனைத் தொடர்ந்து சாராதேவி 30 கிராம் காராயின் வைத்திருந்ததால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு 36 வயதான சிகையலங்கார நிபுணர் யென் மே வோன், போதை பொருள் கடத்தல் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டதற்குப் பிறகு தற்போது தான் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது