மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென ஏற்பட்ட கோர விபத்து..! பள்ளி மாணவர்கள் உட்பட 27 பேர் பலி.!
இந்தோனேஷியாவில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து ஏற்பட்டு மாணவர்கள் உட்பட, 27 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில், ஒரு தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் சேர்ந்து, சுற்றுப் பயணம் செய்துள்ளனர். சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, நேற்று, சுபாங் பகுதியில் உள்ள, அவர்களது பள்ளிக்கு, பேருந்தில் புறப்பட்டனர்.
அவர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென சாலைக்கு அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு நடந்த விபத்தில், மாணவர்கள், பேருந்து ஓட்டுநர் உட்பட 27 பேர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 39 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கு காரணம் பேருந்தில் பிரேக் செயல்படாது தான் காரணம் என விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.