மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: பள்ளிவளாகம் அருகே குண்டு வெடிப்பு.. 6 பேர் பலி., 12 பேர் படுகாயம்..! ஆப்கானில்., மீண்டும் பயங்கரம்.!!
காபூல் நகரில் பள்ளி வளாகம் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். 12 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தாலும், அங்கு தலிபான் மற்றும் பிற ஐ.எஸ் இயக்கம் இடையே அதிகார பகிர்வு மற்றும் பிற விஷயம் தொடர்பாக சண்டை நடந்து வருகிறது. தலிபான் பெண்கள் கல்வி கற்க அனுமதி வழங்கலாம் என உலக நாடுகளின் அழுத்தத்தால் ஒப்புக்கொண்டாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐ.எஸ்.கே போன்ற அமைப்பால் அவர்களுக்கே ஆப்பு வைக்கப்படுகிறது.
தலிபான் ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஆப்கானிஸ்தானில், அவர்கள் முஸ்லீமாக மதிக்காத சில முஸ்லீம் இனக்குழுக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. சில இடங்களில் இன்னும் கொலைவெறி தாக்குதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று ஆப்கானிஸ்தானில் பள்ளி வளாகம் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல், மேற்கு காபூல் பகுதியில் உள்ள மும்தாஸ் பள்ளியில் முதலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் 6 பேர் பலியாகியுள்ள நிலையில், 12 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவித்துள்ளன.