பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே எல்லை பஞ்சாயத்து.. உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த தலிபான்.!
பாகிஸ்தான் நாட்டுக்கும் - ஆப்கானிஸ்தான் நாட்டுக்கும் இடையே 2,670 கி.மீ நீளமுள்ள சர்வதேச எல்லை உள்ளது. எல்லை விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் பாகிஸ்தான் படையினர் நிம்ரோஸ் மாகாணத்தின் முள்வேலிகளை விரிவுபடுத்த முயற்சி செய்துள்ளனர்.
இதனை அறிந்த தலிபான் வீரர்கள் அதனை தடுத்து நிறுத்திய நிலையில், நங்கர்ஹார் மாகாணத்திலும் பாகிஸ்தான் வீரர்கள் எல்லையை விரிவுபடுத்தியுள்ளனர். இதுதொடர்பான பிரச்சனை இரண்டு நாடுகளுக்கும் இடையே நீடித்து வருகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஃமூத் தெரிவிக்கையில், "விஷமிகள் தேவையில்லாமல் பிரச்சனை செய்கின்றனர். அதனை நாங்கள் கவனிக்கிறோம். ஆப்கானிய அரசுடன் தொடர்பில் உள்ளோம்" என்று தெரிவித்தார்.
ஆனால், எல்லை பிரச்சனை தொடர்பாக ஆப்கானிய தலிபான் படைத்தளபதி சனாவுல்லா சாங்கின் தெரிவிக்கையில், "வேலி அமைப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இனி வேலிகள் அமைக்கப்படக்கூடாது" என்று எச்சரித்து இருக்கிறார்.