#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் - இந்தியாவில் நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்.!
உலக நாடுகளில் பரவலாக நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்றவை மீண்டும் ஏற்பட தொடங்கியுள்ளது. அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற பல்வேறு நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 09.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், நொய்டா வரை உணரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.