மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரிகளில் மாணவிகள் நுழைவுத்தேர்வு எழுத தடை - பரபரப்பு உத்தரவால் பாதிக்கப்படும் பெண்களின் எதிர்காலம்..!
நாங்கள் மாற்றத்தை கொண்டு வருவோம் என ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்கு எதிரான செயல்களை இன்றும் தொடருவது உலக அரங்கில் கண்டனத்தை குவித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை தொடர்ந்து, அங்கு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுளள்ன.
தலிபான் தலைமையிலான அரசு முன்பை போல இல்லாமல் முன்னேற்றத்துடன் செய்லபடும் என முதலில் தாலிபன் அறிவித்தாலும், பின்னாட்களில் அவர்களின் கோரமுகம் வெளிப்பட தொடங்கியது.
பெண்களுக்கு எதிரான செயல்களில் இன்று வரை தனது பாணியை மாற்றிக்கொள்ளாத ஆப்கானிய தலிபான் அமைப்பினர், அரசு அதிகாரத்தை கைப்பற்றியதும் அதனை மேலும் அதிகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் வரும் மாதம் நடைபெறவிருந்த உயர்கல்வி தேர்வுகளில் மாணவிகள் தேர்வெழுத அனுமதி கிடையாது. மாறாக அனுமதி வழங்கும் தனியார் பல்கலைக்கழகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு உயர்கல்வித்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.