பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
அமெரிக்க கடற்படை வீரரை தலிபான்கள் விடுதலை செய்யக்கூறி அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை.!
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதால், அங்கு தலிபான் ஆட்சி நடந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் தன்னை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக்கொண்டதால், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வசம் ஆட்சி சென்றது.
கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக பிப்ரவரி 1 ஆம் தேதி அமெரிக்காவின் கடற்படை வீரர் மார்க் பரீர்ச் தாலிபான்களால் கடத்தப்பட்டார். இன்று வரை அவர் விடுவிக்கப்படவில்லை. அமெரிக்க படைகளின் விலக்கத்திற்கு பின்னும் அவர் விடுவிக்கப்படாத காரணத்தால், அவரின் நிலைமை என்ன என்று தெரியவில்லை. அவர் உயிருடன் இருப்பதாக மட்டும் தகவல்கள் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக நாளை (பிப். 1) அமெரிக்க கடற்பாறை வீரர் மார்க் தாலிபான்களால் பிணையக்கைதியாக பிடிக்கப்ட்டர். அவர் ஆப்கானிய மக்களுக்காக தனது வாழ்நாட்களை செலவிட்ட சிவில் எஞ்சினியர். எந்த தவறையும் அவர் செய்யவில்லை. 2 வருடமாக அவர் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கர்கள் மற்றும் அப்பாவி மக்களின் பாதுகாப்பை அச்சுறுத்துவது ஏற்றுக்கொள்ள இயலாதது. பணயக்கைதிகள் என்பது கொடுமையான மற்றும் கோழைத்தனமான செயல் ஆகும். தலிபான்களின் சட்டத்திற்கு மதிப்பளித்து பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அமெரிக்க கடற்படை வீரர் மார்க் விடுதலை செய்யபடட வேண்டும். இது பேச்சுவார்த்தைகள் விவகாரம் கிடையாது" என்று தெரிவித்தார்.
இதனால் அமெரிக்கா தனது எஞ்சிய வீரரை மீட்க தயாராகியுள்ளதை உறுதி செய்யும் நிலையில், தலிபான்கள் விரைவில் மார்க்கை விடுதலை செய்யாத பட்சத்தில், அமெரிக்க படையினர் தனது நட்பு நாடுகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் சென்று தனது வீரரை மீட்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.