#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாகிஸ்தானுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த தலிபான்.. பாகிஸ்தானை கைப்பற்றுவோம் - பகிரங்க மிரட்டல்..!
ஆயிரம் தற்கொலைப்படை வீரர்கள் மூலமாக தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை கைப்பற்றிவிடுவோம் என தலிபான் எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான ஆட்சியை பிடிக்க, பாகிஸ்தான் மறைமுக ஒத்துழைப்பு தந்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், பின்னாட்களில் பாகிஸ்தானின் செயல்பாடுகள் ஆப்கானிய தாலிபான்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பல உலக நாடுகளும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு நிர்வாக மேம்பாட்டுக்காக வழங்கி வந்த நிதியை நிறுத்திவிட்டது.
இதனால் ஆப்கானிய மக்கள் அவதிப்பட தொங்கிய நிலையில், இந்தியா உட்பட சில நாடுகள் மனிதாபிமான உதவிகளான உணவு, மருத்துவ பொருட்களை வழங்கி வருகிறது. பாகிஸ்தானிடம் இருந்தும் கோதுமை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அவை குப்பையில் போடும் அளவுக்கு தரத்துடன் இருப்பதாக தலிபான் விமர்சித்து இருந்தது.
இந்த நிலையில், தலிபான் அதிகாரி அப்துல் பஷீர் வெளியிட்டுள்ள வீடியோவில் பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது, "பாகிஸ்தான் நாட்டை ஒவ்வொரு ஆப்கானியர்களும் வெறுக்கிறார்கள். எங்களுக்கென 5 ஆயிரம் ஆண்டு வரலாறுகள் உள்ளது.
எங்களின் வரலாற்றை பாதுகாக்க எங்களுக்கு தெரியும். பாகிஸ்தான் நாட்டின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த 1000 தற்கொலைபடைவீரர்கள் தயாராக இருக்கிறார்கள். தேவைப்பட்டால் இஸ்லாமாபாத்தை கைப்பற்றி எங்களின் 2ம் தலைநகராக அதனை மாற்றுவோம்" என்று பேசியுள்ளார்.