53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பேருந்து - லாரி நேருக்குநேர் மோதி பயங்கர விபத்து..! 15 பேர் உடல்கருகி பரிதாப பலி.!!
உறக்கத்தில் ஓட்டுநர் இருந்ததால் விபத்து 15 ஏற்பட்டு பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் எனுகு-போர்ட் ஹார்கோர்ட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் பேருந்து பயணம் செய்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில், தகவலறிந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்குள் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர்.
மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரிக்கவே, பேருந்து ஓட்டுநரின் உறக்கமே விபத்திற்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.