மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆப்ரிக்காவில் 3 நாடுகளை புரட்டிப்போட்ட அனா புயல்.. பேய் மழையால் 77 பேர் பலி..!
ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர், மலாவி, மொசாம்பிக் ஆகிய நாடுகளை வெப்ப மண்டல புயலான அனா தாக்கியது. புயலின் தாக்கத்தால் பெய்த பேய் மழையின் காரணமாக 3 நாடுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் அங்குள்ள பல நகரங்கள் உருக்குலைந்து போயுள்ள நிலையில், மடகாஸ்கர் தீவில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,30,000 பேர் தங்களது வாழ்விடத்தை இழந்து தற்காலிக இடங்களில் தங்கியிருக்கின்றனர்.
மலாவி நாட்டினை பொறுத்த வரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் பல்வேறு நகரங்கள் பேரழிவில் சிக்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்விநியோகம் கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளன. மொசாம்பிக் நாட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தினால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், தலா 12 க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் தரைமட்டமாகியுள்ளன.