தன் கணவரிடம் ஜீவனாம்சம் பெற்றே உலகின் பணக்காரப் பெண்மணியாக வலம் வரும் புண்ணியவதி; யார் தெரியுமா?
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெப் பெசோஸ். 54 வயது நிறைந்த பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர். இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர் ஆகும்.
இவருடைய மனைவி மெக்கென்சி . நாவலாசிரியரான இவருக்கும், ஜெப் பெசோஸக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.மேலும்,பெண் குழந்தை இல்லாத நிலையில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில், திடீரென ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இந்த தகவலை அவர்கள் இருவரும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்தில் தான் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் 4 சதவீத பங்குகளை மெக்கின்சிக்கு இழப்பீடாக அளிக்க ஜெப் பெசோஸ் ஒப்புக்கொண்டார். இந்த பங்குகளின் மதிப்பு 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) ஆகும்.
இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட மெக்கின்சி, உலகின் மிகப்பெரிய பெண் பணக்காரர்களில் மூன்றாவது இடம் பெறுபவர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.