ஒபாமாவின் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்; சாவை வென்ற குழந்தையை நெகிழவைத்த வீடியோ காட்சி.!



america-ex-president-barac-obama-christmax-celepration

புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தோஷப்படுத்த கிறிஸ்மஸ் தாத்தாவாக மாறி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வித்தியாசமான முறையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

அமெரிக்காவில் இயங்கிவரும் 'சில்ட்ரன்ஸ் நேஷனல்' என்ற அமைப்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லத்தை கவனித்து வருகிறது. இந்த நிலையில் அந்த குழந்தைகளை சந்தோஷப்படுத்த அங்கு சென்ற ஒபாமா குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களுடன் கிறிஸ்துமஸை சிறப்பாக கொண்டாடி அக்குழந்தைகளை மகிழ்வித்துள்ளார். இதனால் அவரை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். 


இது தொடர்பான வீடியோ ஒன்றை சில்ட்ரன்ஸ் நேஷனல் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பாரக் ஒபாமாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது. அந்த ட்வீட்டில், ‘தங்களது குழந்தைகளை மகிழ்வித்த பாரக் ஒபாமாவிற்கு நன்றி. உங்களது திடீர் வருகையும், நீங்கள் அளித்த பரிசுகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முகத்தில் சந்தோஷத்தை உண்டாக்கியது. உங்களது பரிசுகள் அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.