திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கண்ணாமூச்சி விளையாடி காதலனை கதறவைத்து பிணமாக்கிய காதலி.. மூச்சுப்பிடிக்க நெஞ்சடைத்து நடந்த பயங்கரம்.!
காதலனோடு மதுபோதையில் கண்ணாமூச்சி விளையாடிய காதலி, போதையில் மட்டையானதால் காதலன் மூச்சுத்திணறி பலியான சோகம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் சாரா பூன். இவரின் காதலர் ஜார்ஜ் டோரஸ் ஜூனியர். தம்பதிகள் இருவரும் கடந்த 2020 பிப்ரவரி மாதம் ஒன்றாக சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர்.
பின்னர், இருவரும் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடிய நிலையில், காதலர் ஜார்ஜ் சூட்கேசுக்குள் சென்று பதுங்கி இருந்துள்ளார். இதனால் அவர் மூச்சு விட இயலாமல் திணறியுள்ளார்.
காதலியும் போதையில் இருந்த நிலையில், அவர் தன்னை விடுவிக்க கூறி காதலியிடம் கேட்டுள்ளார். அவரும் போதையில் என்னால் திறந்து விட முடியாது என கூறி மட்டையாகியுள்ளார்.
இறுதியில் காதலன் அங்கிருந்து வெளியே வர இயலாமல் தவித்த நிலையில், செல்போனில் விடியோவை பதிவு செய்து வைத்தபடி உயிரிழந்துள்ளார். போதை தெளிந்து 7 மணிநேரம் கழிந்து எழுந்த சாரா, தனது காதலரை தேடியுள்ளார்.
அவரின் செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்ட பின்னர், செல்போன் அழைப்பு வீட்டிற்குள் இருந்து வருவதை உணர்ந்து சூட்கேஸை திறந்து பார்த்து பதறியபடி காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த அதிகாரிகள் ஜார்ஜின் இறப்பை உறுதி செய்ய, இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் காதலி சாரா கொலையாளியாக புரோரிடா நீதிமன்றத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.