#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
8 வயது மகள் கண்முன் தாய் சுட்டுக்கொலை; தந்தை வெறிச்செயல்.!
அமெரிக்காவில் உள்ள ஹவாய் பகுதியை சார்ந்த பெண்மணி தெரசா. இவர் அங்குள்ள சமூகவலைதளத்தில் புகழ்பெற்ற நபராக இருந்து வருகிறார். இவர் தனது கணவர் ஜெய்சன் (வயது 44) என்பவரை பிரிந்து தற்போது 8 வயது மகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தாய் மற்றும் மகள் தங்களது வீட்டின் பார்க்கிங் பகுதியில் இருந்தபோது, அங்கு துப்பாக்கியுடன் வந்த ஜெய்சன் தனது மனைவியை மகளின் கண்முன்னே சுட்டுக்கொலை செய்தார். மேலும் அவரும் அங்கிருந்து தப்பிச்சென்று தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தெரசாவுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.