மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீதியில் சண்டையிட்டு தம்பதி நடத்திய துப்பாக்கிசூடில் சிக்கி, 4 வயது சிறுவன் பரிதாப பலி..! நொடியில் பெற்றோர் கண்மண் சோகம்.!
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தம்பதிகள் தங்களது காரில் சென்று கொண்டிருந்தனர். அச்சமயம் சாலையில் இரண்டு பேர் ஆவேசமாக சண்டையிட்டுக் கொண்ட நிலையில், திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காருக்குள் இருந்த குழந்தையின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து, நான்கு வயது சிறுவன் கோர் ஆதம்யன் பரிதாபமாக உயிரிழந்தார். குண்டு அவரின் உடலை துளைத்து, காரின் பின்பக்க இருக்கை வரை சென்றது.
இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், சாலையில் சண்டையிட்டு துப்பாக்கி சூடு நடத்திய 29 வயது இளைஞர் பைரன் பர்குர்ட் மற்றும் 27 வயது பெண்மணி அலெக்ஸாண்ட்ரியா ஜென்டைல் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.