மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி நிர்வாகத்தின் பணத்தை திருடி சூதாட்டம்.. கன்னியாஸ்திரியின் பகீர் செயல்..!
சூதாட்டத்திற்கு அடிமையாக இருந்த கன்னியாஸ்திரி, பள்ளி நிர்வாகத்தின் பணத்தில் கைவைத்து சூதாட்டம், ஆடம்பர சுற்றுலா என உல்லாசமாக இருந்து வந்த சம்பவம் நடந்துள்ளது. இறுதியில், உண்மை அம்பலமாகி 1 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணத்தில், ரோமன் கத்தோலிக் கிருத்துவ சபைக்கு சொந்தமான தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்த கன்னியாஸ்திரி மேரி மார்கரெட் க்ரூப்பர் (Mary Margaret Kreuper) வயது 80. இவர் இந்த பள்ளியில் கடந்த 60 வருடமாக பணியாற்றி வந்துள்ளார்.
ஆசிரியராக பணியை தொடங்கிய கன்னியாஸ்திரி மேரி, பின்னாளில் பள்ளியின் முதல்வராக இருந்துள்ளார். இவர் சூதாட்டத்திற்கு அடிமையானவராக இருந்து வந்த நிலையில், சூதாட்டத்திற்கு பணம் கிடைக்காமல் பள்ளி நிர்வாகத்தின் நிதியிலேயே கைவைத்துள்ளார். பள்ளிக்கு செலுத்தப்படும் கல்விக்கட்டணம், நன்கொடை போன்றவற்றையும் தனது சொந்த செலவுக்கு பயன்படுத்தி இருக்கிறார்.
தனது கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிக்கணக்கு வரும் பணத்தை, ரகசிய வங்கிக்கணக்குக்கு அனுப்பி சூதாட்டத்தை தொடர்ந்து வந்துள்ளார். இந்த பணத்தை வைத்து ஆடம்பர சுற்றுலா பயணமும் செய்துள்ளார். இவ்வாறாக ரூ.5.97 கோடி பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. பல்லயில் பணியாற்றி வந்த ஆசிரியர்களின் புகாரின் பேரில், பள்ளி நிர்வாகம் இதுகுறித்து விசாரணை செய்ய தொடங்கியுள்ளது.
இந்த தகவலை அறிந்த கன்னியாஸ்திரி, தவறான ஆவணங்களை அழித்துவிட ஊழியர்களிடம் எச்சரித்துள்ளார். அவர்களும் வேறு வழியின்றி அதனை செய்த நிலையில், ஆவணங்கள் அழிக்கப்பட்ட தகவலும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கன்னியாஸ்திரியை கைது செய்தனர்.
நீதிமன்ற விசாரணை அனைத்தும் நேற்று நிறைவு பெற்ற நிலையில், நீதிமன்றத்தில் கன்னியாஸ்திரி மேரி மார்கரெட் க்ரூப்பர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு ஒருவருட சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.