அமெரிக்கா & மெக்சிகோவை வாட்டி வதைக்கும் வெப்பம்; 4 நாட்களுக்கு 45 டிகிரிக்கு மேல் பதிவாகலாம் - எச்சரிக்கை.!



America & Mexico Heat Wave 

 

வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் அதன் அண்டை நாடான மெக்சிகோவின் எல்லைப் பகுதிகளில் வரலாறு காணாத வெப்பநிலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 

அங்கு பல்வேறு இடங்களில் சர்வ சாதரணமாக வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது. இதனால் வெப்பம் மக்களால் தாங்க இயலாத அளவு இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது. 

world

தொடர் வெப்ப அலைகளின் காரணமாக உயிரிழப்பும் ஏற்படுகின்றன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம், இனிவரும் நாட்களில் கூடுதலாக நான்கு டிகிரி வரை உயரலாம் என வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது. 

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இயற்கையாக வெப்பத்தை அதிகரித்துக் கொள்ளும் எல் நினோ விளைவு காரணமாக வெப்பம் அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.