மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலையோர பள்ளத்தில் உருண்டு பேருந்து விபத்து.. 20 பேர் துடிதுடிக்க மரணம்..!
50 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 20 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகிய சோகம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பெருவில் சாலை விபத்துகள் என்பது அதிகளவு நடந்து வருகிறது. அங்குள்ள தரமற்ற சாலைகளின் நிலையால் பல விபத்துகள் நடைபெறுவதாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
பெரு நாட்டின் வடக்கே உள்ள படாஜ் மாகாணம், டாயப்பம்பா நகரில் இருந்து லா லிப்ரட்டின் நகரை நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தீடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் பாய்ந்து 100 மீட்டர் அளவிலான தூரத்திற்கு உருண்டு சென்று விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
மேலும், 33 பேர் காயமடைந்து உயிருக்கு போராடி அலறித்துடித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.