#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொது இடத்தில் போலீசார் செய்யும் காரியத்தை பாருங்க.. வைரலாகும் வீடியோ.!
கிறிஸ்துமஸ் என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது. இந்நிலையில் பொது இடத்தில் போலீசாரும் மக்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் நடன புரிந்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்னும் ஒரு சில தினங்களில் வர இருக்கிறது. இந்நிலையில் இப்போதிலிருந்து உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மக்கள் மகிழ்ந்து வருகின்றனர். இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகை இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் மியாமி மாகாணத்தின் ஒரு மாலில் பிளாஷ் மாஃப் எனப்படும் நடனமாடும் நிகழ்ச்சி நடந்தது. பிளாஷ் மாஃப் என்பது ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கும் சிலர் திடீர் என நடனமாட ஆரம்பித்து விடுவார்கள்.
அவ்வகையில் மியாமி மாலில் நின்று கொண்டிருந்த நடனக்கலைஞர்கள் சிலர் திடீரென நடனமாடினார்கள். இதனால் அங்கு நின்ற மக்களும் அவர்களுடன் சேர்ந்து நடனமாட தொடங்கினார்கள். நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களது நடனத்தை ரசித்தனர்.
#AventuraPolice taking a moment to celebrate the holiday spirit with @AventuraMall shoppers! @cityofaventura pic.twitter.com/6Gr75b8GGH
— Aventura Police (@aventurapolice) December 18, 2018
அந்த நேரத்தில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் வந்ததும் நடனத்தை நிறுத்திவிடுவார்கள் என்ற எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக போலீசாரும் அவர்களுடன் இணைந்து நடனமாடினார்கள். அவர்கள் நடனமாடும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.