தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கூகுள் மீது வழக்கு, நஷ்ட ஈடு ரூ.345 கோடியா! அமெரிக்க அதிபர் வேட்பாளரான இந்திய வம்சாவளி பெண்ணால் பெரும் பரபரப்பு.!
தற்போது அமெரிக்காவில் அதிபர் பதவியை வகிப்பவர் டொனால்ட் டிரம்ப் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவு பெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஜனநாயக கட்சியின் சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் துளசி கபார்ட்.
இந்திய வம்சாவளியான இவர் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் நிதி திரட்டுவதற்காகவும் தேர்தல் குழுவை நியமித்துள்ளார். மேலும், தனது தேர்தல் பிரச்சாரங்களை விளம்பரப் படுத்துவதற்காக கூகுள் நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஒன்றும் செய்துள்ளார்.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் மீது துளசி கப்பார்ட் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்: அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான ஜனநாயக கட்சியின் முதல் சுற்று விவாதம் ஜூன் 26, 27 தேதிகளில் நடைபெற்றது. ஆனால் இந்த விவாத விளம்பரங்களை கூகுள் நிறுவனம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி விட்டது.
இதனால் சரியான நேரத்தில் வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய முக்கிய கருத்துக்கள் சென்றடையவில்லை. மேலும் எதிர்பார்த்த அளவு நிதி உதவியும் சேரவில்லை. முதல் சுற்று விவாதத்தில் கலந்துகொண்ட வேட்பாளர்களின் பாதிக்கும் மேற்பட்ட பெயர்கள் கூகுள் தேடலில் முதல் இடம் பெற்ற நிலையில் எனது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு இழப்பீடாக ரூ.345 கோடியை கூகுள் நிறுவனம் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கூகுள் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது: சந்தேகத்தின் அடிப்படையில் அவரது விளம்பரங்கள் நிறுத்திவைக்கப்பட்டன. ஆனால் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.