திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னை பெண் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக போட்டியா? பாராட்டுகள் குவிந்து வருகிறது.!
சென்னையில் பிறந்து வளர்ந்த கமலா ஹாரிஸ் என்ற பெண்மணி இந்திய வம்சாவளியாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அடுத்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்டவர் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மனைவியான ஹிலாரி கிளிண்டன். தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து மக்களால் விமர்சிக்கப்பட்டவர் குடியரசு கட்சியின் வேட்பாளர் தற்சமயம் அதிபராக பதவி வகிக்கும் டொனால்ட் ட்ரம்ப்.
இதனால் அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கிலாரி கிளின்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி அவர் வெற்றி பெற்ற முதலே அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் அவருக்கு எதிராக விமர்சனங்களும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அங்கு நடைபெற்ற மிட் டேர்ம் தேர்தலில் குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதேவேளையில் ஜனநாயக கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு ட்ரம்பின் அதிபர் பதவி நிறைவடைவதால் அதே ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி தான் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இக்கட்சியின் சார்பாக 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தற்போது செனட்டராக பதவி வகிப்பவர் கமலா ஹாரிஸ். இவர் அட்டர்னி ஜெனரல், துணை அட்டார்னி ஜெனரல் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 1990ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்து தமிழை தாய்மொழியாக கொண்ட இவர் அடிக்கடி தமிழகம் வந்து செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். ஜமைக்காவை சேர்ந்த இவரது தந்தையுடன் தற்பொழுது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.
ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட அவருக்கு அக்கட்சியில் பெரும்பான்மையான ஆதரவு இருப்பதால் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய வம்சாவளியினரை சார்ந்த ஒருவர் அமெரிக்க அதிபராவதற்கு வாய்ப்புள்ளதால் இந்தியாவின் சார்பாக அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.