மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. மான்களுக்கும் ஒமிக்ரான் கொரோனா உறுதி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
அமெரிக்காவில் உள்ள அயோவா மாகாணத்தில் இருக்கும் மான்களை, அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். கடந்த டிச. 12 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 31 ஆம் தேதி வரை 131 மான்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்துகையில், 19 மான்களில் கொரோனா நோயெதிர்ப்பு சக்தி இருப்பது உறுதியானது.
மேலும், 68 மான்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு நடந்த சோதனையில், 7 மான்களின் மூக்கு பகுதியில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பது உறுதியானது. வெள்ளை நிற மான்களில் ஒமிக்ரான் வகை வைரஸும் உறுதி செய்யப்பட்டது. மேலும், வெள்ளைநிற மான்களின் மொத்த மாதிரியில் 80 விழுக்காடு மானுக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதியானது.
நியூயார்க் ஸ்டேடன் தீவு பகுதிகளில் வசித்து வரும் மான்கள் சுதந்திரமாக வாழ்ந்து வரும் நிலயில், அவைகளில் இருந்தும் ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும், மான்களிடம் இருந்து ஒமிக்ரான் மனிதர்களுக்கு பரவிய ஆதாரம் இல்லை என்றாலும், அதற்கான ஆய்வு நடந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.