உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா.. 1 நாளில் 10 மில்லியன் பேருக்கு கொரோனா.. ரெக்காட் பிரேக் சம்பவம்.!!



america-touch-1-day-corona-cases-1-million-plus-shockin

கொரோனா பரவலில் தனது முந்தைய ஒருநாள் சாதனையை முறியடித்துள்ள அமெரிக்கா உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கடந்த 2019 ஆம் வருடத்தின் இறுதியில் உலகளவில் பரவிய கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. உலகளவில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதல் இடத்தில் சகல விதத்திலும் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்கா உள்ளது. உயிரிழப்பும் அங்கு அதிகம். 

இந்த நிலையில், அமெரிக்கா தனது உச்சகட்ட கொரோனா பரவலில், தனது ஒருநாள் கொரோனா சோதனையை முறியடித்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 590,000 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. இந்த அளவை முறியடுத்துள்ள அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் 1,045,968 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

இந்த தகவல் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அமெரிக்க மக்கள் கொரோனா வழிகாட்டுதலை கடைபிடித்தார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் கொரோனாவை கட்டுப்படுத்த அங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.