மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகமே பேரதிர்ச்சி..! 19 வயது பெண் பாதாள அறையில் நிர்வாணமாக மீட்பு., ஆன்லைன் நண்பனை பார்க்க சென்று துயரம்..!
மாயமானதாக கூறப்பட்ட 19 வயது பெண்மணி, அவரின் 39 வயது ஆண் நண்பரின் வீட்டில் இருந்து நிர்வாணமாக மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆன்லைன் நண்பரை சந்திக்கச்சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
அமெரிக்காவில் உள்ள உட்டாக் மாகாணத்தை சார்ந்த 19 வயது இளம்பெண் மடலின் ஆலன் (Madelyn Allen). ஆலன் அங்குள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாயமான நிலையில், இதுகுறித்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இளம்பெண் இறுதியாக டிச. 13 ஆம் தேதி விடுதியில் இருந்து சென்றுள்ளது சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.
காவல் துறையினரின் விசாரணை நடந்து வரும் போதே, இளம்பெண்ணின் செல்போனில் இருந்து டிச. 14 ஆம் தேதி குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், "ஐ லவ் யூ" என்று எழுதப்பட்டு இருந்துள்ளது. பின்னர், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் செல்போனின் இருப்பிடத்தை ஆய்வு செய்தனர்.
அதன்பேரில், பிரவுன் என்ற நபரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், பிரவுன் தனது வீட்டில் நான் மட்டுமே இருக்கிறேன் என்று கூறவே, அதனை நம்பாத அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, மாயமான மடலின் ஆலன் வீட்டின் இருட்டான பாதாள அறையில் ஆடைகள் இல்லாமல் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, பிரவுனை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பிரவுன் - மடலின் ஆலன் சேட்டிங் செயலியில் நண்பர்கள் ஆகியுள்ளார். பின்னர் இருவரும் சந்திக்க திட்டமிட்ட நிலையில், மடலினை பிரவுன் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பிரவுன் நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறவே, இளம்பெண் மடலின் ஆலன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இளம்பெண்ணின் எதிர்ப்பையும் மீறி, அவரை மிரட்டி பல விதமாக கட்டாயப்படுத்தி பிரவுன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரின் செல்போனையும் பறித்துள்ளார். செல்போனை பறிப்பதற்கு முன்னதாகவே மடலின் ஆலன் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார். இதன்பின்னரே அதிகாரிகள் பிரவுனை கைது செய்துள்ளனர்.
மேலும், முகமறியா நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் கூறும் போலியான வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அமெரிக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.