பல ஆண்டுகளாய் பெண்ணுக்கு தொடர்ந்து சுரக்கும் தாய்ப்பால்; காரணம் தெரியுமா?.. விபரம் இதோ.!



america-women-elisabeth-anderson-sierra-hyperlactation

 

அமெரிக்காவில் உள்ள ஓரிகன் மாகாணம், அலாஹா நகரை சேர்ந்த பெண்மணி எலிசபெத் ஆண்டர்சன் ஷிரா. இவருக்கு திருமணம் முடிந்து கணவர், 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2015ல் குழந்தை பெற்ற பெண்மணிக்கு, 2015 முதல் 2018 வரை தாய்ப்பால் அதிகப்படியாக சுரந்துள்ளது. 

குழந்தை பிறந்த பின் Hyperlactation Syndrome என்ற ஹார்மோன் பிரச்சனை காரணமாக, தாய்ப்பால் கட்டுப்படுத்த இயலாத அளவு உற்பத்தி ஆகியுள்ளது. இதனால் எப்போதும் தாய்ப்பால் அவருக்கு இயற்கையாக சுரக்கப்பட்டு வெளியேற்றப்படும் நிகழ்வும் நடந்துள்ளது. தனது தாய்ப்பாலை வீணாக்க மனமில்லாத எலிசபெத், அதனை சேகரித்து தானம் செய்ய தொடங்கியுள்ளார். 

Elizabeth

இவ்வாறாக அவர் 1,599 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்துள்ளார். இதனால் அமெரிக்கா மட்டுமல்லாது உலகளவில் தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளின் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 20, 2015 முதல் தற்போது வரையில் அவர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார். 

கடந்த 9 ஆண்டுகளாக தாய்ப்பால் விநியோகம் தொடர்ந்து வந்த நிலையில், அவரின் செயல்பாடுகள் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. அதாவது, அதிக தாய்ப்பால் தானம் செய்த பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 

Elizabeth

இதுகுறித்து எலிசபத் தெரிவிக்கையில், "எதிரிக்கு கூட என் நிலைமை வரக்கூடாது. நீங்கள் என்னை தாய்ப்பால் தானத்திற்காக பாராட்டலாம். ஆனால், எனது உடல்நிலை எனக்கு மட்டுமே தெரியும். என்னால் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் வாழ்ந்துள்ளன என்பதை என்னாலேயே நம்ப இயலவில்லை" என்று கூறினார்.

Hyperlactation Syndrome என்பது பால் உற்பத்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாய்ப்பாலின் அளவு அதிகமாகும் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வில் பால் வேகமாகவும் வலுக்கட்டாயமாகவும் வெளியேறலாம், இதனால் போதுமானதாய் விட கூடுதல் தாய்ப்பால் வந்தாலும் குழந்தைக்கு பாலூட்டுவது கடினம்.

Elizabeth

Hyperlactation இயற்கையாக சில நேரங்களில் நின்றுவிடும் என்றாலும், மேற்கூறிய பெண்ணை போல வெகு சிலருக்கே இவ்வாறான நிலைமை ஏற்படும். சாதாரண Hyperlactation பிரச்சனைக்கு குழந்தைக்கு பாலூட்டும்போது சாய்ந்து பாலூட்டுவது பால் விரைந்து வெளியேறுதலை தவிர்க்கும்.

இவ்வாறான பிரச்சனைக்கு அறிகுறியாக மார்பகம் மென்மையாகவும் வசதியாகவும் உணராத பட்சத்தில், உணவளித்த பிறகும் கூட மார்பக அலர்ஜி, மார்பக குழாய்கள் மற்றும் புண், மார்பக காம்புகளில் வலி போன்ற உணர்வு ஏற்படும்.

Elizabeth

தாய்ப்பால் வரவில்லை என மார்பகத்தை அளவுக்கு அதிகமாக அழுத்துதல், பால் சேகரிக்க பயன்படும் பம்பை அதிகளவு உபயோகம் செய்தல், Alveoli எனப்படும் மருத்துவ நிலையின் காரணமாகவும் மேற்கூறிய பிரச்சனை ஏற்படலாம். 

இவ்வாறான பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு மார்பக வலி, மார்பக காம்புகளில் வலி, மார்பக அலர்ஜி, தாய்ப்பாலை சுரக்கும் குழாய்களில் அடைப்பு போன்றவைகளை சந்திப்பார்கள். திடீரென பால் வெளியேறும் நிகழ்வும் ஏற்படலாம்.