மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒடிசா இரயில் விபத்து, 288 பேர் பலி விவகாரம்; அமெரிக்காவில் இருந்து வந்த அழைப்பு.. காரணம் இதுதான்.!
சென்னை நோக்கி கொல்கத்தாவில் இருந்து வந்த கோரமண்டல் அதிவிரைவு இரயில், கர்நாடக மாநிலத்தின் யஷ்வந்த்புரில் இருந்து ஹவுரா நோக்கி பயணம் செய்த துரந்தோ அதிவிரைவு இரயில், சரக்கு இரயில் ஆகியவை அடுத்தடுத்து ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 288 பயணிகள் பலியாகினர், 900 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
கொல்கத்தாவில் இருந்து பல கனவுகளுடன் சென்னை நோக்கி பயணம் செய்த இரயிலில் இருந்த 288 பேர் பலியானது இந்தியாவையே சோகத்திற்குள்ளாக்கியது. தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில அரசுகள் ஒருநாள் துக்க தினமும் அனுசரித்தது. நல்வாய்ப்பாக இவ்விபத்தில் தமிழகத்தை சேர்ந்தோர் பலியாகவில்லை என்று களஆய்வு செய்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ் சிவசங்கர் அறிவித்தனர்.
ஒடிசா இரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த இந்தியாவின் நட்பு நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்தனர். கனடா பிரதமர் ஜஸ்டின் இந்தியர்களுக்காக துணை நிற்போம் என தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்க்டன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு போனில் தொடர்பு கொண்டு தனது இரங்கலை பதிவு செய்தார். மேலும், எதிர்காலத்தில் விபத்தை தவிர்க்க தேவையான முயற்சிக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.