காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
உரைப்பனி ஏரியில் தவறி விழுந்த இந்திய தம்பதியினர்... பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்..!
அமெரிக்காவில் கட்டுக்கடங்காத பனிப்புயல் வீசி வருவதால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் 25 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பனியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டவர்கள் பனியில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவை சேர்ந்த நாராயணா- ஹரிதா என்ற தம்பதியினர் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி அங்கே வசித்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
இந்நிலையில் இந்த இந்திய தம்பதியினர் தங்களது இரண்டு மகள்களுடன் அங்குள்ள போனிக்ஸ் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்கு உள்ள உட்கேனான் உரைப்பணி ஏரியை பார்வையிட சென்ற நாராயணா ஹரிதா மற்றும் இவரது உறவினர் கோகுல் ஆகிய மூவரும் ஏரிக்குள் தவறி விழுந்துள்ளனர்.
மேலும் இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த மீட்பு பணி குழுவினர் மூவரது உடலையும் சடலமாக மீட்டனர். மேலும் இவர்களது மகள்கள் 2 பேரும் கரையிலேயே நின்றதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது.