மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்த உடனே மருத்துவரை முறைத்து பார்த்த குழந்தை..! உலகளவில் டிரெண்டாகும் குழந்தையின் புகைப்படம்!
உலகில் பெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடன் அழும். மேலும் சில குழந்தைகள் மட்டுமே சிரிப்பது போன்று இருக்கும். சில குழந்தைகள் கண்ணை மூடிக்கொண்டே அழும் கண் திறக்கவே மணிக்கணக்கில் ஆகும். இந்நிலையில் பிறந்தகுழந்தை ஒன்று மருத்துவரை முறைத்து பார்ப்பது போன்ற புகைப்படம் தற்போது உலகெங்கும் டிரெண்டாகிகொண்டு வருகின்றது.
பிரேசில் ரியோ டி ஜெனிரோ நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் டிஜீசஸ் பார்போசா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த முதலே அழவே இல்லை. இதனால் மருத்துவர்கள் குழந்தையை அழவைப்பதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் குழந்தை மருத்துவர்களை முறைக்கும் விதமாக பார்த்துள்ளது.
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர்கள் புகைப்படம் எடுக்க நியமித்து வைத்திருந்த தொழில்முறை புகைப்பட கலைஞர் குழந்தை முறைப்பது போன்று பார்ப்பதை உடனே புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்நிலையில் இசபெல்லா பெபெரைரா டி ஜீசஸ் என்ற அந்தப் பெண் குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது உலக அளவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. மேலும் இதனை வைத்து தற்போது பல வித்தியாசமான மீம்களும் வைரலாகி கொண்டு இருக்கிறது.