மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்லப்பிராணிகள் பிரியர்களா நீங்கள்.? பெண்ணின் கண்களில் இருந்து உயிருடன் எடுக்கப்பட்ட 60 புழுக்கள்.. ஜாக்கிரதை..!
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு நீண்ட நாட்களாக அவரது கண்களில் அரிப்பு பிரச்சனை இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த இளம்பெண் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்தப் பெண்ணிற்கு தொடர்ந்து கண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண் தனது கண்களை வேகமாக தேய்த்துள்ளார். அப்போது அவரது கண்களில் இருந்து புழுக்கள் வந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நடந்ததை எல்லாம் கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் கண்களை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவரது கண்கள் இரண்டும் உயிருள்ள புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். மேலும் அவரது வலது கண்ணில் 40 உயிருள்ள புழுக்களும் இடது கண்ணில் 10ற்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்தப் பெண்ணின் கண்களில் வட்டப்புழுக்கள் தாக்கப்பட்டு இருப்பதால் இவை செல்லப்பிராணிகள் மூலம் பரவி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் அந்த இளம்பெண் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் செல்ல பிராணிகளிடம் இனிமேல் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அந்தப் பெண்ணிற்கு அறிவுரை கூறியுள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து ஐம்பதிற்கும் அதிகமான புழுக்கள் எடுக்கப்பட்டதால் கண்களில் லார்வாக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்க கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் மருத்துவ குழுவினர் கூறுவது என்னவென்றால் செல்லப் பிராணிகளின் மேல் உள்ள சிறு சிறு உரோமங்களால் மனிதர்களுக்கு புழு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறுகின்றனர். இவை சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விடும் என்று மருத்துவ குழுவினர் எச்சரிக்கின்றனர்.