மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாரு சாமி நீ?.. தொப்புள் அழுக்கை சேகரிக்கிறது என இழுத்து தைத்த இளைஞன்.. ஷாக் செய்தி.!
தான் தாயின் கருவறையில் இருக்கும்போது தொப்புள் கொடிவழியே உணவு சாப்பிட்டதை மறந்த இளைஞன், தனது தொப்புள் பகுதியில் அழுக்கு சேருகிறது என அதனை தைத்த சம்பவம் நடந்துள்ளது.
அர்ஜென்டினாவை சேர்ந்த டிக் டாக்கர் எஸிகுயில் (Ezequiel). இவர் தனது தொப்புள் மூலமாக தொப்புளில் அழுக்குகள் அதிகரிப்பதாக எண்ணியுள்ளார். இதற்காக என்ன செய்யலாம் என யோசனை செய்யும்போது, அவருக்கு வினோத எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவரின் திட்டப்படி மருத்துவமனைக்கு சென்றவர், தனக்கு நேரும் பிரச்சனைகளை எடுத்துரைத்து தொப்புள் இடைவெளியை சேர்த்து தைக்க கோரிக்கை வைத்துள்ளார். இவரின் கோரிக்கையை ஆலோசனை செய்த மருத்துவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பிரத்தியேக மருத்துவர் குழுவினால் எஸிகுயிலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தொப்புள் ஓட்டை அடைக்கப்பட்டது. தற்போது அவர் தான் நலமுடன் இருப்பதாக டிக் டாக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். இவரிடம் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தொப்புளில் அழுக்குகள், சிலருக்கு உரோமம் போன்றவை சேருவது இயல்பே. ஆனால், அதனை வாரம் ஒருமுறை சுத்தம் செய்து நாமே பாதுகாக்கலாம்.