#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிறுவனுக்கு போதைப்பொருள் கொடுத்து, பாலியல் சித்ரவதை செய்த தம்பதி.. 262 குற்றசாட்டுகளால் பகீர்..!
மைனர் வயதுள்ள சிறுவனை கணவன் - மனைவியாக பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கிய ஜோடியின் மீது 260 க்கும் மேற்பட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள நரோரா பகுதியில் 48 வயதுடைய கணவருடன், 47 வயது மனைவி வசித்து வருகிறார். இந்த தம்பதியின் வீட்டருகே 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவன் ஒருவனும் வசித்து வருகிறான். இந்நிலையில், பிப்ரவரி மாத தொடக்கத்தில் தம்பதியின் வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பல்வேறு செயல்பாடுகள் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் திருஆயினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், வீட்டில் இருந்த பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் போன்றவை கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, தம்பதிகள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணை நடைபெறும் போதே, தம்பதியின் வீட்டருகே வசித்து வந்த சிறுவன் காவல் நிலையத்திற்கு தானாக சென்று, தம்பதிகள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து, சித்ரவதை செய்ததாக புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுவனிடம் விசாரணை நடத்தியபோது, அவனுக்கு போதைப்பொருள் கொடுத்து தம்பதிகள் பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமானது.
சிறுவனுக்கு போதைப்பொருள் கொடுத்த தம்பதி ஒருகட்டத்தில் அவனை தங்களின் பாலியல் இச்சைக்கு உபயோகம் செய்ய தொடங்கியுள்ளனர். சிறுவனின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் நடவடிக்கையை முன்னெடுத்த இருவரும், சிறுவனை சீரழிப்பது தொடர்பான விஷயங்களை காட்சிகளாகவும் பதிவு செய்து வைத்துள்ளனர்.
சிறுவனை கடந்த 2016 ஆம் வருடத்தில் இருந்து 2020 ஆம் வருடம் வரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட தம்பதி, அவனை பாலியல் இச்சைக்கு உட்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் அம்பலமானது. இதனால் தம்பதிகளின் மீது 262 பாலியல் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில், ஆணின் மீது 126 குற்றச்சாட்டும், பெண்ணின் மீது 136 குற்றச்சாட்டும் அடங்கும்.